Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடாளுமன்றத்தில் நுழைந்தவரை துணிவுடன் வளைத்து பிடித்த பாஜக எம்பி..!

Advertiesment
நாடாளுமன்றத்தில் நுழைந்தவரை துணிவுடன் வளைத்து பிடித்த பாஜக எம்பி..!
, புதன், 13 டிசம்பர் 2023 (17:58 IST)
நாடாளுமன்றத்தில் இன்று இருவர் அத்துமீறி நுழைந்த நிலையில் அவர்களில் ஒருவரை உத்தரபிரதேசம் மாநில எம் பி வளைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென இருவர் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து நுழைந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் மற்ற எம்பிகள் அச்சத்துடன் தெறித்து ஓடிய நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி ஆர்கே சிங் பட்டேல் என்பவர் மட்டும் குற்றவாளிகளில் ஒருவர் உடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். தப்ப முயன்றவரை வளைத்து பிடித்து பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  இந்த நிலையில் பாதுகாப்பு பாதுகாப்பை மீறி உள்ளேன் நுழைந்த இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களது பெயர்  நீலம் மற்றும் அமோல் ஷிண்டே என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவனை ஜாமினில் எடுக்க முயற்சித்த மாமியாரை கொலை செய்த மனைவி.. தஞ்சையில் பயங்கரம்