Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி? – பாஜக மீது டி.ஜி.பியிடம் புகார்!

Advertiesment
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி? – பாஜக மீது டி.ஜி.பியிடம் புகார்!
, புதன், 13 டிசம்பர் 2023 (12:08 IST)
தெலுங்கானாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக உள்ளிட்ட கட்சிகள் சதி செய்வதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.



தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் ஆட்சி காலம் முடிவடைந்த நிலையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி அமைத்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் ஆட்சியை கவிழ்க்க பாஜக, பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்தவர்கள் சதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தெலுங்கானா காங்கிரஸ் கட்சி பொதுசெயலாளர்கள் தெலுங்கானா டிஜிபியிடம்  புகார் அளித்துள்ளனர்.

அதில், பாரதிய ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏக்கள் ஸ்ரீஹரி, ராஜேஸ்வர ரெட்டி மற்றும் பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் ஆகியோர் 6 மாதத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என பேசி வருவதுடன், அதற்கான சதி வேலைகளிலும் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட்வான்ஸ் ப்ராசஸர்.. அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங்! – வெளியானது iQOO 12!