நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக கூட்டணி அரசு ஆட்சி அமைத்தது என்பதும் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் 18 வது மக்களவையின் புதிய எம்பிக்கள் பதவி ஏற்று கொண்ட நிலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நடந்தது. இதனை அடுத்து பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பொருளாதார அறிக்கையை தாக்கல் செய்கிறார், நாளை அவர் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய உள்ளார்.
கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து உள்ள நிலையில் இன்று அவர் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மசோதாக்களும் இந்த பட்ஜெட் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.