Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய பட்ஜெட் நிறைவு செய்யும்.! முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..!!

MK Stalin

Senthil Velan

, ஞாயிறு, 21 ஜூலை 2024 (11:25 IST)
கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை 'டேக்' செய்து  அறிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் 2024-ல், மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
 
தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல், பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல், தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

 
கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என நம்புகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. வழக்கறிஞரை பிடித்து விசாரணை செய்யும் போலீசார்..!