2000 ரூபாய் நோட்டு இன்னும் வைத்திருக்கிறீர்களா? இன்றே கடைசி..!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (09:13 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது என்பதும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. 
 
இந்த அவகாசம் இன்றுடன் முடிவடைவதை அடுத்து 2000 ரூபாய் நோட்டில் கையில் யாராவது வைத்திருந்தால் உடனடியாக இன்று மாலைக்குள் வங்கி சென்று 2000 ரூபாய் நோட்டை கொடுத்து மாற்றிவிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
மேலும் 2000 ரூபாய் நோட்டை வங்கியில் கொடுத்து மாற்றுவதற்கான கால அவகாசம் நீடிக்கப்படாது என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
 
எனவே இன்றே கடைசி நாள் என்பதால் வங்கி அல்லது ஏடிஎம் டெபாசிட் இயந்திரங்களில் மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஏற்கனவே 90% சதவீதத்திற்கும் மேலாக 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியிடம் திரும்ப வந்துவிட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.<>  
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

அடுத்த கட்டுரையில்
Show comments