Publish Date: Fri, 29 Sep 2023 (10:12 IST)
Updated Date: Fri, 29 Sep 2023 (10:14 IST)
2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது என்றும் அதன் பிறகு கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
ஒரு சில சமூக வலைதளங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் நீடிக்கப்படும் என்று வெளியாகி கொண்டிருக்கும் செய்திகள் உண்மை அல்ல என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே 2000 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் நாளைக்குள் வங்கியில் சென்று மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ரிசர்வ் வங்கி தகவலின் படி இதுவரையில் வரை 93 சதவீத நோட்டுகள் திரும்ப பெற்றுள்ளதாக தெரிகிறது.
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி மாற்றுவதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.