சர்ச்சில் பிரார்த்தனை செய்த திருமலை ஊழியர் சஸ்பெண்ட்.. பெரும் பரபரப்பு

Siva
புதன், 9 ஜூலை 2025 (08:14 IST)
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரி, சர்ச்சுக்கு சென்று பிரார்த்தனை செய்ததை அடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உதவி நிர்வாக அதிகாரி  பதவியில் இருக்கும் ராஜசேகர் பாபு, தனது சொந்த ஊரில் உள்ள சர்ச்சில் பிரார்த்தனையில் கலந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் கிறிஸ்துவ மத பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுவதால், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நடத்தை விதிமுறைகளை அவர் மீறிவிட்டார் என்று தேவஸ்தானம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
 
"ராஜசேகர் பாபு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது சொந்த ஊரில் உள்ள சர்ச் பிரார்த்தனையில் கலந்துகொண்டது தேவஸ்தானத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று கோவில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, இதே காரணங்களுக்காக 18 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது ராஜசேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சர்ச்சில் பிரார்த்தனை செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இந்த நடவடிக்கை, தேவஸ்தான ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments