அரியானா மாநிலத்தில் லஞ்சப் பணத்தை விழுங்கிய அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியானா மாநிலம் பரிதாபாத்தில் வசிக்கும் ஷூப் நாத் என்பவரின் எருமை மாடு திருடுபோனது.
இதுகுறித்து, அவர் போலீஸ் ஸ்டேசனில் புகாரளித்தார். இதை விசாரிக்க வேண்டுமானால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வேண்டுமென கேட்டுள்ளார்.
இதுகுறித்து ஹூப் நாத் போலீஸில் புகாரளித்தார். எனவே மாடு திருட்டு வழக்கில் லஞ்சம் வாங்கிய காவலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பிடிக்க முயன்றனர்.
கையும் களவுமாக அவரைப் பிடிக்கச் சென்ற போது, அந்த காவலர் தன் கையில் பணத்தை விழுங்கினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.