தொகுதி வளர்ச்சி நிதியை கோயில் பூஜைகளுக்கு பயன்படுத்துங்கள்: பாஜக எம்.பி உத்தரவு
 
 			
 
 			
					
			        							
								
																	தொகுதிக்கான வளர்ச்சி நிதியை கோவில் பூஜைகளுக்கு பயன்படுத்துங்கள் என பாஜக எம்பி ஒருவர் உத்தரவிட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
	 
	ஒவ்வொரு தொகுதிக்கும் அந்த தொகுதி மக்கள் நலனுக்காக பணம் ஒதுக்கப்படும் என்பதும் அந்த பணம் முழுவதுமே மக்களின் நலனுக்காக செலவு செய்யப்படும் என்பதும் தெரிந்ததே.
	 
	இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா என்ற தொகுதியில் பாஜக எம்பி வீரேந்திர சிங் தனது தொகுதி வளர்ச்சி நிதியை கோவில்களில் பஜனைகள் பூஜைகள் நடத்த பயன்படுத்திக்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
	 
	ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வருடத்திற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு மக்களுக்கான வளர்ச்சி பணிகளை கவனிக்க வேண்டிய நிலையில் அந்த நிதியை கோயில்களுக்கு ஒதுக்க பாஜக எம்பி உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.