Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலித்து ஏமாற்றிய நபரின் மனைவியை பழிதீர்த்த காதலி.....

Advertiesment
காதலித்து ஏமாற்றிய நபரின் மனைவியை பழிதீர்த்த காதலி.....
, புதன், 2 டிசம்பர் 2020 (16:56 IST)
பீகார் மாநிலத்தில் தனது காதலனின் மனைவியை பழிதீர்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  பிகார் சரிப்பில் பகுதியில் உள்ள மோரா தலப் என்ற கிராமத்தில், கோபால் ராம் என்பவர் ஒருவர் பெண்ணைக் காதலித்துள்ளார்.

ஆனால் வேறு ஒரு பெண்ணுடன் அவருக்குத் திருமணம் முடிந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவரது முன்னாள் காதலி. அவரைக் பழிவாங்க துடித்துள்ளார்.

எனவே கோபாலின் சகோதரியின் தோழி என்று கூறிக்கொண்டு வீட்டிகு வந்த அவர், கோபாலின் மனைவி உறங்கிக் கொண்டிருக்கும்போது,  அவரது கூந்தலைத் துண்டித்துவிட்டு,அவரது கண்ணில் பெவிகுவிக் எனும் பசையை அவரது கண்ணில் ஊற்றிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் பாதிக்கப்பட்ட கோபாலின் மனைவி அலறித் துடித்தார்.பின்னர்  அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்குத் தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் அவருக்குப் பார்வை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்ற்னர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லி விவசாயிகள் போராட்டம்: திமுக முக்கிய அறிவிப்பு