உத்தரகாண்ட மாநிலத்தில் சாதிமறுத்து திருமணம் செய்துகொள்வோருக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி தொகையை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 1976 ஆம் ஆண்டு முதல் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 10000 ரூபாயாக இருந்த இந்த உதவித்தொகை இப்போது 50000 ரூபாயாக அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது இந்த உதவித்தொகையை நிறுத்த மாநில அரசு ஆலோசிப்பதாக சொல்லப்படுகிறது.
சாதி மறுப்பு திருமணங்களுக்கு பணம் வழங்குவதன் மூலம் லவ் ஜிஹாத்தை, உத்தராகண்ட் அரசு ஊக்கப்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் உத்தரவிட்டுள்ளார்.