மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் பத்திரிக்கையளர் ஒருவரை, ஒரு கும்பல் சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சிகள் இணையதளங்களில் பரவலாகிவருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில்,இன்று, பிந்த் மாவட்டத்தில், பத்திரிக்கையாளர் ரிபுடாமன் சிங் என்பவரை சிலர் கொடூரமாகத் தாக்கிக் கொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிவருகிறது.
இந்த வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள லோகேந்தர் பிரசார் என்ர் இதுகுறித்து பதிவிட்டுள்ளதாவது :
இங்கு சட்டவிரோதமாக நடைபெறும் மணல் சுரங்க கொள்ளையில் இருந்து வெளியே வந்தவர்கள் சிலர், ஜின் அதிகாரத்தின் கிழ் இந்தக் கொலை செய்துள்ளனர். வேறு யாரும் இதுகுறித்து பேசவில்லை அப்படி பேசினாலும் அவர்களுக்கும் இதே நிலை தான் என்பது போலுள்ளது இந்த சம்பவம். இதற்கு பின்னால் போலீஸாரும் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.