Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது கோழைத்தனம்.! நடிகை பார்வதி காட்டம்..!!

Senthil Velan
வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (13:08 IST)
கேரள நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது கோழைத்தனமான விஷயமாக பார்க்கிறேன் என நடிகை பார்வதி காட்டத்துடன் தெரிவித்துள்ளார். 
 
மலையாள சினிமாவில் நடிகைகள் கொடுத்த பாலியல் புகார் காரணமாக கேரள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் மற்றும் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது குறித்து, திரைத்துறையைச் சேர்ந்த, பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மரியான், தங்கலான் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை பார்வதி, தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது “கோழைத்தனமான விஷயமாகப் பார்க்கிறேன்” என  தெரிவித்துள்ளார். ஒரு பொறுப்பான நிலையில், இருந்த அவர்கள் இப்படியான ஒரு முடிவை எடுத்து எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்றும் பதில் சொல்ல முடியாமல் தான் அவர்கள் இப்படியா ஒரு முடிவை எடுத்துள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்
 
பிரச்சனைக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை என்றாலும் கூட அரசாங்கத்துடன் இணைந்து இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க நடிகர் சங்கம் ஒரு சிறிய நகர்வையாவது எடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த நடிகர் சங்கம் தான் நடிகைகள் வாய்த்த பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியே சொல்வதற்கு முன்பு வரை, அப்படி எதுவும் இங்கு நடக்கவில்லை என்று வெளிக்காட்டிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தது என்று பார்வதி விமர்சித்துள்ளார்.


ALSO READ: ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!
 
அம்மா சங்கத்தில் உள்ளவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்றும் அங்கு நமது தேவைகளைப் பற்றிப் பேச நடிகைகளான எங்களுக்கு உரிமை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். எனவே வரும் காலத்தில் கேரள நடிகர் சங்கத்திற்கு நல்ல தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று நடிகை பார்வதி வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த நபர்? யார் அந்த சார்? மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்! - எடப்பாடி பழனிசாமி!

இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

விமான விபத்தில் இருந்து தப்பித்த 2 பணிப்பெண்கள்.. மயக்கத்தில் இருந்து எழுந்ததும் கேட்ட கேள்வி..

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்..!

விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யாதான்! - அஜர்பைஜான் அதிபர் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்