கேரள மாநிலம்,கோழிக்கோடில் உள்ள கடைவீதியில் ஒரு இளைஞர், இரு சக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த தனியார் பேருந்து, அந்த இளைஞர் மீது மோதி, பேருந்து சக்கரத்தில் அவரை சில அடி தூரம் வரை இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது,
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எங்கபுழா என்ற ஊரில், ஒரு வாலிபர் தனது இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுது, அவ்வழியே வந்த தனியார் பேருந்து ஒன்று அந்த இளைஞரை இடித்து அவரைச் சக்கரத்தில் இழுத்துச் சென்றது.
பின்னர், சில தூரம் வரை சென்ற பேருந்தை, மக்கள் எல்லோரும் கூச்சலிட்டு நிறுத்தச் சொல்லினர். ஓட்டுநர் நிறுத்தினதால் அந்த இளைஞர் காயம் எதுவுமின்றி தப்பித்தார்.
அதனையடுத்து, பேருந்து சக்கரத்திலிருந்து எழுந்த இளைஞர், எதுவும் நடக்காததுபோன்று அந்த இளைஞர் தனது கையை தூக்கி உதறிவிட்டு அருகில் இருந்த கடைக்குச் சென்றார். இந்த சிசிடிவி கேமரா வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
source ANI