மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 25,000 வாக்குகள் முன்கூட்டியே பதிவு: ஆர்ஜேடி குற்றச்சாட்டு

Siva
புதன், 19 நவம்பர் 2025 (11:03 IST)
பிகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ஜகதானந்த் சிங், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
 
"வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே, ஒவ்வொரு EVM-லும் தலா 25,000 வாக்குகள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டிருந்தன" என்று அவர் குற்றம் சாட்டினார். இதனால் தேர்தல் முடிவுகளை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகவுள்ளதாகவும் ஆர்ஜேடி தெரிவித்தது.
 
இந்த குற்றச்சாட்டைத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
 
EVM-கள் வைஃபை, ப்ளூடூத் போன்ற வெளிப்புற தொடர்புகளுடன் இணைக்கப்படாததால், தொழில்நுட்ப ரீதியாக முறைகேடு சாத்தியமற்றது.
 
வாக்குப்பதிவுக்கு முன் முகவர்கள் முன்னிலையில் 'பூஜ்ய வாக்கு'கள் காட்டப்பட்டு, ஒத்திகை வாக்குகள் அகற்றப்பட்டன. தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே மேற்கொள்ளப்பட்டன.
 
தற்போது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொழில்நுட்ப ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் தவறானது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments