Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகள் இணைப்பு பிரச்சனைகளை உண்டாக்கும் – சுப்ரமண்ய சுவாமி எதிர்ப்பு !

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (11:56 IST)
வங்கிகள் இணைப்புக்கு பாஜகவின் மூத்த தலைவரான சுப்ரமண்ய சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை சரிசெய்யும் நோக்கோடு பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைத்துள்ளது மத்திய அரசு. இந்த முடிவுக்கு வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் வல்லுனர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வங்கிகள் இணைப்பு குறித்து பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமண்ய சுவாமி இன்று கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘பொருளாதாரம் சரியாக இல்லாத நிலையில், வங்கிகள் இணைப்பை அவசரப்பட்டு நடைமுறைப்படுத்தி உள்ளார்கள். இது எளிதான காரியம் அல்ல. ஒரே சாலையில் பேங்க் ஆஃப் பரோடாவும் இருக்கும். விஜயா வங்கியும் இருக்கும். நாடு இப்போது இருக்கும் பொருளாதார நிலைமையில் இதை செய்திருக்கக் கூடாது. அருண் ஜேட்லி நிதி அமைச்சராக இருந்தபோது சிறப்பாகச் செயல்படாததன் விளைவை நாம் இப்போது அனுபவிக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments