Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.50 மினிமம் பேலன்ஸில் வங்கி அக்கவுண்ட் வேண்டுமா? இதை படியுங்கள்

, புதன், 8 மார்ச் 2017 (22:21 IST)
மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்த ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் தற்போதுதான் ஓரளவு நிலைமை சீரடைந்துள்ளது. ஆனால் திடீரென தனியார் வங்கிகள் மட்டுமின்றி அரசு பொதுத்துறை வங்கியா பாரத ஸ்டேட் வங்கியும் மினிமம் பேலன்ஸ் ரூ.5000 வைத்திருக்க வேண்டும், இல்லை என்றால் அபராதம் செலுத்த நேரிடும் என்றும் அறிவித்துள்ளது.



 


அதுமட்டுமின்றி மாதம் ஒன்றுக்கு 4 முறை மட்டுமே பணபரிவர்த்தனை இலவசம் என்றும், அதற்கு மேல் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் பிடிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இந்தியாவில் பெரும்பாலானோர்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 வரைதான் மாத வருமானம் வரும் நிலையில் ரூ,.5000 மினிமம் பேலன்ஸ் என்பது கூடுதல் சிரமத்தை தரும்.

இந்நிலையில் ஃபேஸ்புக், டுவிட்டரில் வங்கி கணக்கை குளோஸ் செய்துவிட்டு அஞ்சல் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குங்கள் என்ற விழ்ப்புணர்வு ஏற்பட்டு வருகிறது

அஞ்சல் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்கினால் குறைந்தபட்சம் ரூ.50 மினிமம் பேல்ன்ஸ் இருந்தால் போதும். மேலும் அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்குத் தொடங்கி ஏடிஎம் கார்டு பெற்று அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். அஞ்சல் நிலையங்களில் சேமிப்புக் கணக்குத் தொடங்குவது மிகவும் எளிது. சேமிப்புக் கணக்குத் தொடங்க புகைப்படம் மற்றும் முகவரி சான்றை அளித்தால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதே பலர் அஞ்சல் நிலையங்களில் கணக்கு தொடங்க முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீனவர் பிரிட்ஜோ படுகொலை எதிரொலி. இந்திய-இலங்கை அதிகாரிகள் அவசர ஆலோசனை