Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாக்காளர்களுக்கு பீதி காட்டிய பாம்பு: கண்ணூர் வாக்கு பதிவில் களோபரம்

வாக்காளர்களுக்கு பீதி காட்டிய பாம்பு: கண்ணூர் வாக்கு பதிவில் களோபரம்
, செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (15:03 IST)
நாடாளுமன்ற தேர்தல் 3 ஆவது கட்ட வாக்குப்பதிவை அடுத்து இன்று கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்கு பதிவின் போது ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததால் அங்கு பரபர்ப்பு ஏற்பட்டது. 
 
கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. இன்று காலை முதல் கேரள மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 
 
இந்நிலையில் கண்ணூர் தொகுதிக்கு உட்பட்ட மயில் கண்டகை நகரில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்துள்ளது. வாக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரம் ஆடிக்கொண்டே இருந்துள்ளது. 
 
அப்போது எதர்ச்சியாக் வாக்காளர் ஒருவர் அதில் இருக்கும் பாம்பை கண்டு கூச்சலிட உடனே வரிசையில் நின்றிருந்த வாக்காளர்களும், தேர்தல் அதிகாரிகளும் தெறித்து ஓடினர். பின்னர் போலீஸார் வந்த அந்த பாம்பு வெளியே எடுத்து காட்டுப்பகுதியில் விட்டனர். 
 
இதனால், சிறிது நேரம் களோபரமான அந்த வாக்கு சாவடி பின்னர் வழக்கமான பணிகளை துவங்கியது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் வாகனங்களில் கட்சிக் கொடிக்கு அனுமதியில்லை