போட்டோஷூட் அலப்பறைகள்; குப்புற கவிழ்ந்த மணமக்கள்: வைரலாகும் வீடியோ

சனி, 20 ஏப்ரல் 2019 (12:24 IST)
திருமணத்திற்கான போட்டோஷூட்டின் போது மணமக்கள் ஆற்றில் குப்புற கவிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
தங்களின் திருமணத்தை வாழ்நாளில் மறக்க முடியாத நினைவாக வைத்துக்கொள்ள மணமக்கள் வித்தியாச வித்தியாசமான போட்டோ மற்றும் வீடியோ எடுப்பது வழக்கம். அதற்கேற்றாற் போல போட்டோகிராப்பர்களும் தங்களின் தனித்துவத்தை காட்ட மணமக்களை வித்தியாசமான இடங்களில் வைத்து போட்டோக்களை எடுப்பர்.
 
அந்த வகையில் கேரளாவை சேர்ந்த புதுமண ஜோடியை பம்பை நதிக்கு அழைத்து சென்ற போட்டோகிராபர், அவர்களை தோனி ஒன்றில் அமர வைத்து கையில் ஒரு இலையை பிடித்தவாறு ஜோடி ஒருவரை ஒருவர் முத்தமிட கூறியுள்ளார். மணமகள் மணமகனை முத்தமிட சென்றபோது பேலன்ஸ் தவறி தோனி தலை குப்புற கவிழ்ந்தது. இதில் தோனியில் இருந்த மணமக்கள் குப்புற விழுந்தனர். இந்த காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கைதியின் முதுகில் ஓம் வடிவில் சூடு – சர்ச்சையைக் கிளப்பும் புகைப்படம் !