Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: முன்னாள் முதல்வர் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு!

Advertiesment
Siddharamaiya
, திங்கள், 14 நவம்பர் 2022 (11:37 IST)
கர்நாடக மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் முன்னாள் முதல்வர் போட்டியிடும் தொகுதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு அதாவது 2023ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் கூட இல்லை என்பதால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன
 
இந்த நிலையில் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிடப் போவதாக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்
 
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று அவர் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கோலார் மக்கள் தன் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதாகவும், கோலார் தொகுதியில் போட்டியிட வேண்டுமென மக்கள் வற்புறுத்தி வருவதாகவும் அதனால் தான் அந்த தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் கர்நாடக மாநில மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொசுவர்த்தி அட்டையில் மூடிய உணவு? – ரயில்வே சாப்பாட்டால் பயணிகள் அதிர்ச்சி!