Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆப்பிளை கொடுத்து 15 சிறுமிகளை சீரழித்த சாமியார்? – கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

Advertiesment
Karnataka priest
, புதன், 9 நவம்பர் 2022 (13:48 IST)
கர்நாடகாவில் இரண்டு சிறுமிகளை வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட சாமியார் சிவமூர்த்தி முருகா சரணரு சுவாமி மேலும் பல சிறுமிகளை வன்கொடுமை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள முருக மடத்தின் மடாதிபதியாக விளங்குபவர் 64 வயதான சிவமூர்த்தி முருகா சரணரு சுவாமி. கடந்த சில செப்டம்பர் மாதத்தில் ஆசிரமத்தில் இருந்த இரண்டு சிறுமிகளை வன்கொடுமை செய்த வழக்கில் சரணரு சுவாமி கைது செய்யப்பட்டார். அவருடன் மடத்தின் வார்டன், 2 ஊழியர்கள், வழக்கறிஞர் ஒருவர் என 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான குற்றப்பத்திரிக்கையை போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். அதில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு சிறுமிகளுக்கு ஆப்பிளில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதற்காக விடுதி வார்டன் ரஸ்மி மற்றும் இருவர் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். இரவில் சிறுமிகளை மடாதிபதிக்கு இவர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களை மிரட்டி மடத்தின் அலுவலகம், படுக்கையறை, கழிவறை உள்ளிட்ட பகுதிகளில் அவர் பலாத்காரம் செய்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சாமியாரின் ஆசைக்கு இணங்க மறுக்கும் சிறுமிகளை வார்டன் நைஸாக பேசி மயக்க மருந்து கலந்த ஆப்பிளை கொடுத்து மயக்கமுற செய்தபின் சாமியார் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் சாமியாரிடம் விசாரணை நடத்தியபோது தான் எந்த தவறும் செய்யவில்லை என தொடர்ந்து மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க மாகாணத்தின் லெப்டினன்ட் கவர்னராகும் இந்திய வம்சாவளி பெண்