இதுக்கு தான் டிரம்புக்கு நோபல் பரிசா? பாகிஸ்தானை கிண்டல் செய்த ஒவைசி..!

Siva
ஞாயிறு, 22 ஜூன் 2025 (15:12 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் பரிந்துரை செய்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. 
 
இந்தச் சூழலில், "ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க அதிபருக்கு நோபல் பரிசு தர வேண்டுமா?" எனப் பாகிஸ்தானை ஓவைசி எம்.பி. கிண்டல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
"ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டுமா என பாகிஸ்தானியர்களிடம் நான் கேட்கிறேன்," என்று ஒவைசி சாடினார். மேலும், அமெரிக்காவின் இந்தத்தாக்குதல், "பாலஸ்தீனியர்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலுக்குத்தான் உதவியாக உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.
 
உண்மையில் ஆசிம் முனீர் அமெரிக்க அதிபருடன் இரவு உணவு சாப்பிட்டாரா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments