Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு தினவிழாவை ஏன் ரத்து செய்யக்கூடாது? காங்கிரஸ் எம்பி கேள்வி!

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (17:26 IST)
இந்த ஆண்டு குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துகொள்ள இருந்தார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டம் நடைபெறும் போது வெளிநாட்டு பிரமுகர்கள் சிலர் சிறப்பு விருந்தினராக வருகை தருவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க இருந்தார் .

இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இருநாட்டு சார்பிலும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய பயணத்தை ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.  இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் வருகையே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ஏன் குடியரசு தினவிழாவையே ரத்து செய்யக் கூடாது என காங்கிரஸ் எம்பி சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் ‘"போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை உருமாறிய கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நமக்கு ஒரு முக்கிய விருந்தினர் இல்லை. ஏன் ஒரு படி மேலே சென்று குடியரசு தின விழாக்களை முழுவதுமாக ரத்து செய்யக் கூடாது?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆரம்பத்திலேயே 1000 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

கடன் தொகை கடன் ரூ. 6,203 கோடி.. வசூலித்தது ரூ. 14,131 கோடி!! பணத்தை திருப்பி கேட்கும் விஜய் மல்லையா

சென்னை மெரினாவில் உணவு திருவிழா! எல்லாம் நம்ம ஊர் ஸ்பெஷல்..! - எப்போ நடக்குது தெரியுமா?

அம்பேத்கர் - அமித்ஷா விவகாரம்: கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை..!

அதிகரித்து வரும் இணைய குற்றம்: 6.69 லட்சம் சிம் கார்டுகளை முடக்கிய மத்திய அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments