Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வரின் சகோதரி டெல்லி பயணம்: நாளை காங்கிரசில் இணைகிறார்

YSR sharmila
, புதன், 3 ஜனவரி 2024 (17:45 IST)
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி  ஒய்.எஸ். சர்மிளா.  இவர்,  ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற கட்சியைத் தொடங்கி,  பாத யாத்திரை மேற்கொண்டு அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இருந்தார்.

இதனால்,  ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஷர்மிளா தெலங்கானா அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

சமீபத்தில், 2023ம் ஆண்டு தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்து, பிரச்சாரம் மேற்கொண்டார்.

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.

பாஜகவுக்கு எதிரான கருத்துகளை கூறி வந்த ஒய்.எஸ். சர்மிளா, காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அவர் தன் கட்சியை காங்கிரஸில் இணைக்கும்படி காங்கிரஸ் மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதையடுத்து, ஒய்.எஸ். சர்மிளா காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், சர்மிளாவின் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. இத்திருமணத்தில் சோனியா, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் அழைக்க சர்மிளா திட்டமிட்டுள்ளார்.

எனவே தனது மகனின் திருமண அழைப்பிதழை அவர்களுக்கு வழங்குவதற்காக இன்று ஐதராபாத்தில் இருந்து அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

நாளை அவர் டெல்லியில், சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கேயை சந்தித்து, முறைப்படி காங்கிரஸில் இணையவுள்ளதாகவும் அவருக்கு தெலங்கானா காங்கிரஸ் தலைவர் பதவி   வழங்கப்படலாம் என தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிற கட்சிகளின் ஐடி விங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி