ஜார்கண்ட் முதலமைச்சராக சமீபத்தில் சம்பாய் சோரன் என்பவர் பதவியேற்ற நிலையில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் சமீபத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக சம்பாய் சோரன் என்பவர் ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றார்.
இந்த நிலையில் இன்று ஜார்கண்ட் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நிலையில் மொத்தம் உள்ள 81 எம்எல்ஏக்களில் சம்பாய் சோரன் அவர்களுக்கு 47 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.
42 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தாலே அரசு வெற்றி பெற்றதாக கருதப்படும் என்ற நிலையில் தற்போது சம்பாய் சோரன் அரசு வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பாய் சோரன் அரசுக்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
இனிவரும் காலங்களில் சம்பாய் சோரன் தலைமையிலான அரசு எப்படி செயல்படும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்