ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் புதிதாக முதல்வர் பதவி ஏற்ற சாம்பாய் சோரன் அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக சாம்பாய் சோரன் முதல்வர் பதவியை ஏற்றார். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர்கள் ஜார்கண்ட் திரும்பி உள்ளதாகவும், ஜார்க்கண்ட் சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
ஜார்கண்ட் சட்டசபையை பொருத்தவரை பெரும்பான்மைக்கு 41 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் முதல்வர் சாம்பாய் சோரன் அவர்களுக்கு 47 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்பாய் சோரன் அரசு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் திடீர் திருப்பம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்