Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாஜ்மஹாலில் காவிக் கொடி நாட்ட முயன்ற நான்கு பேர் கைது – பரபரப்பு சம்பவம்!

Advertiesment
தாஜ்மஹாலில் காவிக் கொடி நாட்ட முயன்ற நான்கு பேர் கைது – பரபரப்பு சம்பவம்!
, செவ்வாய், 5 ஜனவரி 2021 (17:21 IST)
தாஜ்மஹாலில் நான்கு பேர் காவிக் கொடியை நட்டு வைத்து கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு உண்டானது.

தாஜ்மஹாலை கட்டியது ஷாஜகான் என அனைருக்கும் தெரியும். அதுவும் இதனை தனது மனவி மும்தாஜ்ஜின் நினைவாக கட்டினார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே. உலகம் முழுவதும் காதல் நினைவுச் சின்னமாக தாஜமஹால் போற்றப்பட்டு வருகிறது. உலகின் 7 அதிசயங்களில் தாஜ்மஹாலும் ஒன்று.

ஆனால் இங்கு இருந்த சிவன் கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் தாஜ்மஹால் எழுப்பப்பட்டது என சிலர் கூறி வருகின்றனர். மேலும் அந்த கோயிலுக்குள் சென்று தாங்கள் வழிபட அனுமதி அளிக்கவேண்டும் என்றும் கூறிவருகின்றனர். இந்நிலையில் இப்போது தாஜ்மஹாலுக்கு பார்வையாளர்கள் போல வந்த சிலர் காவிக்கொடியை நட்டுவைத்து ஹர ஹர மகாதேவ் என்றவாறு கோஷம் எழுப்பியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு செய்த சோனு பகேல், சுசில் குமார் மற்றும் ரிஷி லாவண்யா எனும் இளம்பெண் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை சித்ராவின் கணவர் மீண்டும் கைது !