கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவர் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த மருத்துவமனையின் முதல்வர் உரிமை கோரப்படாத பிணங்களை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா பெண் மருத்துவர் குறித்த விசாரணையை சிபிஐ அதிகாரிகள் நடத்தி வரும் நிலையில் பல்வேறு அதிர்ச்சி உண்மைகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக உரிமை கோரப்படாத பிணங்களை முதல்வர் சந்திப் போஸ் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த மருத்துவமனையில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக அளித்த பேட்டியில் உரிமை கூறப்படாத பிணங்களை சந்திப் போஸ் வியாபாரம் செய்தார் என்றும் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் மருத்துவமனையில் வெளியாகும் பயோ மெடிக்கல் கழிவுகளை பங்களாதேஷ்க்கு விற்பனை செய்ததாகவும் சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மீது புகார்கள் எழுந்து உள்ள நிலையில் இந்த புகார்கள் குறித்து விசாரணை செய்தால் இன்னும் பல உண்மைகள் தெரியும் என்று கூறப்படுகிறது.
தற்போது மத்திய பாதுகாப்பு படை ஆர்ஜி கர் மருத்துவமனையின் பாதுகாப்பை கையில் எடுத்து உள்ள நிலையில் தீவிர விசாரணையை சிபிஐ அதிகாரிகள் செய்து வருகிறார்கள் என்றும் இந்த மருத்துவமனையில் செய்யப்பட்ட பல ஊழல்கள் வெளியே வரும் என்றும் கூறப்படுகிறது.