அனில் அம்பானியில் ரிலையன்ஸ் குழுமம் போலியான கணக்குகளை காட்டி கடன் பெற்றுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழும நிறுவனங்களான ரிலையன்ஸ் டெலிகாம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் பாராடெல் ஆகிய நிறுவனங்களின் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றில் மொத்தமாக 86 ஆயிரத்து 188 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரிலையன்ஸ் குழுமம் அளித்த கணக்குகள் போலியானவை என கருதியுள்ள யூனியன் வங்கி மற்றும் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில் கடன் கொடுத்த மூன்று வங்கிகளும் இந்த விவகாரம் தொடர்பான விரிவான விசாரணையை மேற்கொள்ள இருப்பதால் நீதிமன்றத்தின் அடுத்தக்கட்ட விசாரணை ஜனவரி 13ல் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.