அதிகனமழைக்கு வாய்ப்பு.. பள்ளிகளுக்கு விடுமுறை.. 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

Mahendran
திங்கள், 26 மே 2025 (10:14 IST)
தென்மேற்கு பருவமழை கேரளத்தில் முன்னதாகவே தொடங்கி விட்டதால், பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், இந்திய வானிலை மையம் கேரளாவில் உள்ள 11 மாவட்டங்களுக்கு மிக கனமழை வரலாம் என சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இன்று கடும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
 
அதிக மழை காரணமாக, பத்தனம்திட்டா, இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, திருச்சூர், கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கண்ணூர் பல்கலைக்கழகத் தேர்வுகள் மற்றும் பிஎஸ்சி தேர்வுகள் வழமைபோல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
மேற்கண்ட இடங்களில் 24 மணி நேரத்தில் 120 மில்லிமீட்டருக்கும் மேல் மழை பெய்யலாம் என்றும், 50–60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments