டிரம்ப் முடிவில் திடீர் திருப்பம்.. வரி உயர்வை 8 நாட்களுக்கு ஒத்திவைத்த டிரம்ப்..!

Mahendran
திங்கள், 26 மே 2025 (10:09 IST)
ஒரு பெரிய திருப்பமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருட்களுக்கு விதிக்க திட்டமிட்டிருந்த 50% இறக்குமதி வரியை 8 நாட்களுக்கு தாமதிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.  
 
ஜூன் 1ல் நடைமுறைக்கு வரவிருந்த இந்த வரிகள், இப்போது ஜூலை 9 வரை தள்ளி வைக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசுவதற்கான கால அவகாசம் கிடைப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என டிரம்ப் தெரிவித்தார்.
 
இந்த அறிவிப்பு, ஐரோப்பியக் குழுமத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உடனான  தொலைபேசி உரையாடலுக்கு பிறகு வந்தது. “நாங்கள் சரியான முறையில் பேச தயாராக இருக்கிறோம்” என லெயன் கூறியதாக  செய்தி வெளியிட்டுள்ளது.
 
“நான் பலரிடம் சொல்லியிருக்கிறேன், அவர்கள் பேச தயாராக இருக்க வேண்டும்,” என டிரம்ப் கூறினார். லெயனுடன் சீக்கிரம் சந்தித்து தீர்வு காண முயற்சி செய்வதாகவும் அவர் கூறினார்.
 
ஐரோப்பிய ஒன்றிய பொருட்களுக்கு 50% வரி விதிக்கவுள்ளதாக கடந்த 2 நாட்களுக்கு முன் டிரம்ப்  எச்சரித்திருந்தார். வணிகம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் பேசவே விரும்பவில்லை, பேச்சுவார்த்தைகள் எங்கும் செல்லவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.
 
இந்த வரிகள் ஜூன் 1ல் அமலுக்கு வரவிருந்தன. ஆனால் லெயனுடன் நடந்த அழைப்பு,  தற்போது  பதற்றத்தை தணித்துள்ளது.
 
லெயனுடன் பேசிய பின், ஜூலை 9க்கு பின் ஒரு முடிவு எடுக்கவுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments