இனி 1 நாள், 2 நாளுக்கு கூட பிக்சட் டெபாசிட் செய்யலாம்.. ரிசர்வ் வங்கி ஆலோசனை..!

Mahendran
செவ்வாய், 27 மே 2025 (16:27 IST)
இந்திய ரிசர்வ் வங்கி , அனைத்து வங்கிகளில் மிகக் குறுகிய காலத்திற்கு, அதாவது ஏழு நாள்களுக்கும் குறைவாக இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால்  1 நாள், 2 நாளுக்கு கூட பிக்சட் டெபாசிட் கணக்குகள் தொடங்கும் சாத்தியத்தைக் கவனத்தில் எடுத்துள்ளது. இதுகுறித்து வங்கிகளிடம் ஆலோசனையும் கேட்டுள்ளது.
 
இது வெறும் யோசனையான நிலையில் உள்ளதாலும், வங்கிகள் இதற்கான முடிவை தாங்களே எடுக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர்களின் தேவையை பொருத்து குறுகிய கால நிரந்தர வைப்புகளை உருவாக்கினால், மக்கள் பங்கெடுக்கும் ஆர்வம் அதிகரிக்கும் என்றும், வங்கிகளில் பணப்புழக்கத்துக்கும் உதவும் என ஆர்பிஐ நம்புகிறது.
 
தற்போதைய நிலையை பார்க்கும்போது, ஆண்டு தோறும் நிரந்தர வைப்புகளில் வாடிக்கையாளர்களின் பங்கேற்பு சுமார் 10% வீழ்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக 2025 மே மாதம் மட்டும் 13% குறைந்துள்ளது. வட்டி விகிதங்களின் குறைவு தான் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், இந்த புதிய யோசனைகள் மூலம் மக்களை பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு திரும்ப ஈர்க்க ஆர்பிஐ முனைவுடன் செயல்படுகிறது. வங்கிகள், இத்திட்டம் குறித்து இந்த மாத இறுதிக்குள் தங்கள் கருத்துகளை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments