Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி: ஆபாச வீடியோ குறித்து ரமேஷ் பேட்டி!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (08:41 IST)
ராஜினாமா செய்த பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, தனது வீடியோ பொய்யானது என தெரிவித்துள்ளார். 

 
கர்நாடகாவில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் நீர்பாசன துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, இளம் பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவருடன் பல முறை பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக தெரிகிறது.  
 
இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் அடங்கிய சிடியை கர்நாடக மக்கள் உரிமை போராட்ட சங்க தலைவர் தினேஷ் கல்லஹள்ளி, பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் காவல் நிலையத்தில் கொடுத்து புகார் அளித்துள்ளார். இந்த செய்தி நேற்று டிவி சேனல்களில் ஒளிப்பரப்பாகி கடும் சர்ச்சைகளை அங்கு எழுப்பியுள்ளது.  
 
மெத்தை மீது அமைச்சரும் அந்த இளம் பெண்ணும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் இருவரின் செல்போன் உரையாடல்கள் ஆகியவை ஆதாரமாக வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய கர்நாடக பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது பதவியை ராஜினாமா செய்தார். 
 
இது குறித்து அவர் தற்போது அவர் கூறியுள்ளதாவது, நான் இருப்பது போன்று வெளியான ஆபாச வீடியோ 100 சதவீதம் போலியானது. எனக்கு எதிராக சிலர் சதி செய்து, இந்த வீடியோ சிடியை வெளியிட்டுள்ளனர். இதற்காக சதித்திட்டம் தீட்டியவர்கள் ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளனர். அந்த சதியை செய்தவர்கள் யார் என்பது எனக்கு தெரியும். 
 
இந்த சதித்திட்டம் பெங்களூருவில் 2 இடத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது. யஷ்வந்தபுரம் போலீஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு கட்டிடத்தின் 4-வது மாடி மற்றும் ஓரியன் வணிக வளாகம் அருகில் உள்ள கட்டிடத்தின் 5-வது மாடியில் இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த தகவலை மட்டும் நான் சொல்கிறேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்! - அரசியல் தலைவர் அஞ்சலி!

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

அடுத்த கட்டுரையில்