Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாநிலங்களவை தேர்தலில் வாக்களித்த எம்.எல்.ஏவுக்கு கொரோனா! மனைவிக்கும் பரவியதால் பரபரப்பு

Advertiesment
மாநிலங்களவை தேர்தலில் வாக்களித்த எம்.எல்.ஏவுக்கு கொரோனா! மனைவிக்கும் பரவியதால் பரபரப்பு
, சனி, 20 ஜூன் 2020 (12:52 IST)
நாடு முழுவதும் காலியாக இருந்த 24 ராஜ்யசபா இடங்களுக்காக நேற்று தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று இரவே எண்ணப்பட்ட நிலையில் பாஜக 8 இடங்களிலும் காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஏற்கனவே ஐந்து இடங்களில் போட்டியின்றி எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் நேற்று மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க வருபவர்களுக்கு கொரோனா பாதிக்காத வகையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு எம்எல்ஏ ஒருவர் வாக்களிக்க வந்த போதிலும் அவர் சிறப்பு உடை அடைந்து வாக்களிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் வாக்களித்த எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அவரை அடுத்து அவருடைய மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
நேற்று மாநிலங்கள் தேர்தலில் வாக்களிக்க வந்த ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜாவத் என்ற தொகுதியில் பாஜக எம்எல்ஏவுக்கு இன்று ஜாவத் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அவருடைய மனைவிக்கும் ஜாவத் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதால் இருவருமே தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

களமிறங்கிய ஒப்போ ஏ52: ஸ்மார்ட்போன் எப்படி?