அதானி குழும முறைகேடுகள் குறித்து பிரதமர் மோடி விசாரிக்க தயங்குவது ஏன் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்யப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் யாருடையது என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி விசாரணைக்கு உத்தரவிடாதது ஏன் என்றும் இதில் தொடர்பானவர்களை சிறையில் அடைக்காதது ஏன் என்றும் கேள்வி அளித்துள்ளார்.
இந்தியாவின் முக்கிய கட்டமைப்புகளை நிர்வகிக்கும் அதானி நிறுவனத்தில் சீனாவை சேர்ந்தவர் முதலீடு செய்தது எப்படி என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி செபி அமைப்பிலிருந்து விலகிய ஒருவருக்கு அதானி நிறுவனத்தில் இயக்குனர் பொறுப்பு தந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதானி நிறுவனத்தில் இயக்குனராக உள்ள ஒருவர் செபி அமைப்பின் அதிகாரியாக இருந்தபோது நடத்தப்பட்ட விசாரணை எப்படி இருந்திருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.