இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகிறது
ஜி20 உச்சி மாநாடு உலகில் உள்ள முக்கிய தலைவர்களின் முக்கிய சந்திப்பு ஆகும். இதில், 19 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, உலகளாவிய நிதிதொடர்பான விவகாரங்கள் எப்படி கையாள்வது என்பது பற்றி விவாதித்து, ஆலோசனை மேற்கொண்டு முடிவெடுப்பார்கள்.
இந்த முறை ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில், 19 நாட்டு தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகிறது. அவருக்குப் பதில், சீன பிரதமர் லி கியாங்க் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், உக்ரைன் போர் தொடர்பாக சர்வதேச தடையால் ரஷிய அதிபர் புதினும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை எனவும் அவருக்குப் பதில் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பார் என கூறப்படுகிறது.