Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வாரத்திற்கு பொது ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் உத்தரவு

Webdunia
சனி, 1 மே 2021 (18:10 IST)
தில்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் 3 வது முறையாக பொது ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தியாவின் உயிரைப் பறிக்கும் கொரொனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. கொரொனா இரண்டாவது அலையில் தொற்றுக்குச் சாதாரண மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தொற்றைக் குறைக்கவும் இதிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்துவருகிறது.  ஆனால் மக்களும் அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுக்காதவரை எதுவும் சாத்தியமில்லை என்ற கருத்து மக்களிடம் எழுந்துள்ளது.

எனவே கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வருவதால், தற்போது 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் மே 1 முதல் இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்கூட்டியே ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். இன்று மாலை 4 மணி முதல் முன்பதிவு தொடங்கும் நிலையில் அரசின் www.cowin.gov.in என்ற தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் டெல்லியில்தான் நாள்தோறும் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே இத்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு  தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக அம்மாநிலத்தில், பொது ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த ஊரடங்கு ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments