Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் ஆவணப் படத்தால்.....2 வாரங்கள் அழுதேன்’’….பாப் சூப்பர் ஸ்டார் இன்ஸ்டாவில் பதிவு !

Advertiesment
என் ஆவணப் படத்தால்.....2 வாரங்கள் அழுதேன்’’….பாப் சூப்பர் ஸ்டார் இன்ஸ்டாவில் பதிவு !
, வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (18:42 IST)
தன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆவணப்படத்தைப் பார்த்து 2 வாரங்கள் கண்ணீரிவிட்டு அழுததாக பிரிட்னி ஸ்பியர்ஸ் தெரிவித்துள்ளார்.

பாப் இசைப்பாடல் உலகில் சூப்பர் ஸ்டார் பிரிட்னி ஸ்பியர்ஸ்.இவருக்கு உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இவரது பாடல்களுக்கு உலகமெங்கும் நல்ல வரவேற்பு இருக்கும். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இவரது வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு  ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

இப்படத்தில் பிரிட்னி ஸ்பியர்ஸ் இந்தளவு முன்னேற்றத்தை அடைய எத்தனை தடைகள் மேற்கொண்டார், அதை எப்படி முறியடித்தார் என்பது ஃபிரேமிங் பிரிட்னி ஸ்பியர்ஸ் என்ற ஆவணப்படத்தில் காட்டபப்ட்டுள்ளது.

இப்படம் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,  என்னைக் குறித்த ஆவணப்படத்த நான் பார்க்கவில்லை ; அது என்மீது ஒரு ஊடக வெளிச்சம் விழச் செய்வதாக உணர்ந்தேன்.இதற்காக நான் 2 வாரங்கள் அழுதேன்…என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பிரிட்னி ஸ்பியர்ஸின் சமூக வலைதளப் பக்கத்தை அவர் நிர்வகிப்பதில்லை என்ற கருத்தும் பகிரப்பட்டு வருகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிங்காரி செயலில் சல்மான் கான் முதலீடு… விளம்பர தூதுவராகவும் ஒப்பந்தம்!