Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்க சோப்ராவை நீக்குங்கள்: காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி

Webdunia
புதன், 21 பிப்ரவரி 2018 (17:48 IST)
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அசாம் மாநிலத்தின் சுற்றுலாத்துறையின் தூதராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று நடைபெற்ற அசாம் சட்டமன்ற கூட்டத்தொடரில் அசாம் மாநிலத்தின் சுற்றுலாத்துறை தூதர் பதவியில் இருந்து பிரியங்காவை நீக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சமீபத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் வெளியான 2018ஆம் வருட காலண்டரில் பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது ஆனால் அந்த காலண்டரில் உள்ள புகைப்படங்கள் அளவுக்கு மீறி கவர்ச்சியாக இருந்ததாகவும், இது அசாம் கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூறி வருகின்றனர்.
 
மேலும் பிரியங்கா சோப்ரா சுற்றுலாத்துறையின் தூதராக பதவியேற்றதில் இருந்து அந்த துறையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் நிகழவில்லை என்றும் எனவே அவரை நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை அசாம் அரசு ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை பெற்றெடுத்தால் 84 ஆயிரம் ரூபாய் பரிசு: அதிரடி அறிவிப்பு..!

வாரம் முழுவதும் சரிந்த பங்குச்சந்தை இன்றும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

பெரியாருக்கு எதிராக அவதூறு.. இது ஒரு அரசியல் தந்திரம்! - சீமானுக்கு திருமாவளவன கண்டனம்!

முதல்வர் ஸ்டாலின் 3 மாதங்களுக்கு மொபைல் ரீசார்ஜ் செய்து தருகிறாரா? வேகமாக பரவும் மோசடி லிங்க்..!

10 நிமிடத்தில் விற்று தீர்ந்த பொங்கல் சிறப்பு ரயில் டிக்கெட்.. கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments