Publish Date: Sat, 20 Jan 2018 (19:49 IST)
Updated Date: Sat, 20 Jan 2018 (19:51 IST)
அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது இதனால் அங்கு மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் தற்போது மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டும், நில நடுக்கங்கள் ஏற்பட்டும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் இன்று காலை அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.
காலை 6.44 மணியளவில் ரிக்டர் அளவில் 5.2 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் பலமாக அதிர்ந்தன. இதனால் அச்சமடைந்த மக்கள் பீதியில் வீதியிலேயே தஞ்சமடைந்தனர். ஆனால் இந்த நில நடுக்கத்தால் சேதன் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஸ்ஸாமில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டபோது அண்டை நாடான பூட்டானிலும் இது உணரப்பட்டது. இந்நிலையில் தற்போது மணிப்பூரிலும் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. இதனால் வட மற்றும் வடகிழக்கு மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.