முன்னாள் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.
தேர்தல் வியூக மன்னன் என்று போற்றப்படும் பிரசாந்த் கிஷோர் சமீபகாலமாக பாஜகவுக்கு எதிராக செயல்படும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க முயன்று வருகிறார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். பாராளுமன்ற தேர்தல் 2024 ஐ குறிக்கோளாக கொண்டு இந்த சந்திப்புகள் நடப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைந்து செயல்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரசாந்த் கிஷோரின் வருகை காங்கிரஸ் கட்சியை வலிமையாக்கும் எனவும் சொல்லப்படுகிறது.