ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

Siva
புதன், 4 ஜூன் 2025 (13:47 IST)
ஜோதி என்ற யூடியூபர் , பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாகவும், பாகிஸ்தான் ராணுவத்தினருடன் நெருக்கமாக பழகியதாகவும் கூறப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.
 
இந்த நிலையில், தற்போது ஜஸ்வீர் சிங் என்ற பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த யூடியூபர் ஒருவரும்  கைது செய்யப்பட்டுள்ளார். இவருடைய YouTube சேனலில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளதாகவும், 'ஜான் மஹால்' என்ற பெயருடைய இவருடைய சேனல் பிரபலமானது என்றும் கூறப்படுகிறது.
 
மேலும், இவ்வாறு பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் உளவாளிகளை சந்தித்ததாகவும், அதன் மூலம் அவர் பாகிஸ்தானுக்கு உளவு சொல்லி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
மேலும், ஜோதி கைது செய்யப்பட்டவுடன், இவர் தனது லேப்டாப், மொபைல் ஆகியவற்றில் உள்ள சில ஆவணங்களை டெலீட் செய்துவிட்டதாகவும், தற்போது அவருடைய அனைத்து மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு, டெலீட் செய்யப்பட்ட டேட்டாக்களை மீட்டெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் முடிவில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

'டிட்வா' புயல்.. பொதுமக்கள் 2 நாட்களுக்கு வெளியேற வேண்டாம்.. பால், பிரட் வாங்கி வைத்து கொள்ளுங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments