Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி 100 தோப்புக் கரணம் போட வேண்டும்! - மம்தா சவால்

Webdunia
வியாழன், 9 மே 2019 (19:31 IST)
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் செய்த திரிணாமுள் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி என்மீதான குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் 100 தோப்புக்கரணம் போட வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.
நம்நாட்டில் மக்களவைப் பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளன. மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்னும் இரண்டு கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் பான்சூரா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.அதில் மம்தா பானர்ஜி பங்கேற்றுப் பேசினார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
 
நிலக்கரி ஊழலில் எனக்குப் பங்குண்டு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அதை நீங்கள் நிரூபித்துவிட்டால் நான் 42 தொகுதியிலும் வேட்பாளர்களை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். ஆனால் அப்படி நீங்கள் இதை நிரூபிக்கவில்லை என்றால் பொதுமக்கள் மத்தியில் காதை பிடித்துக்கொண்டு 100 தோப்புக்கரணம் போட வேண்டும்! அதற்கு நீங்கள் தயாரா ?என்று கேள்வி  எழுப்பி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......??? விஜய்க்கு கேள்வி எழுப்பிய தமிழிசை

அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து பேசக்கூடாது: ரங்கராஜன் நரசிம்மனுக்கு, நிபந்தனை ஜாமீன்..!

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments