Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு விலக்கு தேவையில்லை, எங்களுக்கு செங்கோட்டையன் இருக்காரு: மாணவர்கள்

Webdunia
வியாழன், 9 மே 2019 (18:53 IST)
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று பாஜக தவிர கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 'நீட் தேர்வை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டன, ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் அமைச்சரின் இந்த பதிலுக்கு பல தமிழக மாணவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளனர். எங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தேவையில்லை என்றும், கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் புதிய பாடத்திட்டத்தில் இருந்துதான் 80% நீட் தேர்வின் கேள்விகள் இருந்ததாகவும், அவர் தொடர்ந்து தமிழக கல்வி அமைச்சராக இருந்தால் அதுவே போதும் என்றும்  பதிவு செய்து வருகின்றனர். 
 
இந்த ஆண்டு நீட் தேர்வில் ஒருசில கெடுபிடிகள் தவிர எந்த பிரச்சனையும் இல்லை என்பதும், நீட் தேர்வு எளிமையாகவும், புதிய பாடதிட்டத்தில் இருந்து பல கேள்விகள் வந்துள்ளதால் தமிழக மாணவர்கள் அதிகம் பேர் இந்த ஆண்டு மெடிக்கல் சீட் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments