Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் தீ விபத்து: 2 லட்சம் கொடுத்து ஈடுகட்டும் மோடி!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (10:21 IST)
குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த 8 குடும்பங்களுக்கு நிவாரண நிதி ஒதுக்கியுள்ளார் பிரதமர் மோடி. 
 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்நிலையில் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள ஷ்ரே மருத்துவமனையிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக மருத்துவமனையில் திடீரென தீப்பற்றியுள்ளது. 
 
அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூக்க கலகத்தில் இருந்ததால் நிலவரம் புரிந்து செயல்படுவதற்கு முன்னராக தீ வேகமாக பரவியுள்ளது. இதனால் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
இதனைத்தொடர்ந்து தற்போது குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த 8 குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. மேலும், தீ விபத்தில் காயமடைஇந்தவர்களுக்கு தலை ரூ.50,000 நிதி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம்! தமிழக அரசு அறிவிப்பு..!

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments