Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

29 வருடங்களுக்குப் பிறகு அயோத்தியில் காலடி வைத்த பிரதமர் மோடி!

29 வருடங்களுக்குப் பிறகு அயோத்தியில் காலடி வைத்த பிரதமர் மோடி!
, புதன், 5 ஆகஸ்ட் 2020 (14:22 IST)
இந்திய பிரதமர் மோடி 29 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் முதல்முறையாக அயோத்திக்குள் காலடி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி நில விவகாரம் முடிந்து தற்போது அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக இன்று அயோத்தி வந்தடைந்துள்ள பிரதமர் மோடி முதலாவதாக அங்குள்ள புகழ்பெற்ற பழமைவாய்ந்த அனுமன் கர்கி கோவிலுக்கு சென்றார். அங்குள்ள அனுமன் சிலைக்கு தானே தீபம் ஏற்றி வழிப்பட்ட பிரதமர் மோடியை கோவில் அர்ச்சகர்கள் வரவேற்று அவருக்கு பட்டு துணி அணிவித்து மரியாதை செய்தனர். பிறகு குழந்தை ராமரின் கோவிலுக்கு சென்று வழிபட்ட அவர் ராமர் கோவில் அமைய உள்ள இடத்திற்கு வந்தார்.

இந்நிலையில் மோடி 29 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் முதல் முதலாக அயோத்தி யில் காலடி எடுத்து வைத்துள்ளார். கடைசியாக அவர் 1991 ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரளிமனோகர் ஜோஷி நடத்திய திரங்கா யாத்திரையின்போது அயோத்திக்கு சென்றார். அதன் பிறகு தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட அவர் அயோத்திக்குள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் இதயத்துக்கு நெருக்கமான நாள் – அத்வாணி கருத்து!