Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமரின் உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது: தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி..!

Advertiesment
பிரதமரின் உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது: தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி..!

Mahendran

, செவ்வாய், 5 மார்ச் 2024 (10:21 IST)
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் குறிப்பாக காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பிரதமர் மோடி உடன் முதல்வர்கள் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி திடீரென பிரதமரின் ஆதரவு எங்களுக்கு தேவை என்றும் மத்திய அரசுடன் நாங்கள் சமூகமாக இருக்க விரும்புகிறோம் என்றும் கூறியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி அதன் பின் தெலுங்கானா மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் செய்தார். அங்கு அவர் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அதே நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர் 
 
இந்த விழாவில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசியபோது பிரதமர் மோடி எங்களுக்கு மூத்த அண்ணன் போல, தெலுங்கானாவும் குஜராத் மூலம் முன்னேறுவதற்கு பிரதமரின் உதவி எங்களுக்கு தேவைப்படுகிறது 
 
மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க விரும்பவில்லை, சுமூகமான உறவுக்கு விரும்புகிறோம். மெட்ரோ ரயில் திட்டம், குஜராத்தின் சபர்மதி நதிக்கரையை புனரமைத்தது போல, முசி ஆற்றங்கரை புனரமைப்பு உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்.பி.ஐ முன்வைத்துள்ள வாதம் மிகவும் கேவலமானது! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்