Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி.எப்.ஐ. அமைப்பின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (13:23 IST)
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என கர்நாடக மாநில அமைச்சர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
சமீபத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்தது என்பதும் இதனை அடுத்து அந்த அமைப்பு கலைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில காவல் துறை அமைச்சர் ஞானேந்திரா, ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றும் அந்த அமைப்புக்கு கர்நாடக மாநிலத்தில் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது குறித்த தகவலை சேகரித்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்
 
இந்த தகவல் அனைத்தும் சேகரித்த பிறகு அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments