Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டில்லியில் வெடிபொருட்கள் பறிமுதல்...6 பேர் கைது !

Advertiesment
Explosives seized
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (17:49 IST)
நாட்டின் தலை நகர் டில்லியில் வெடிபொருட்களைக் கொண்டு சென்ற 6 பேரை கைது செய்துள்ளனர்.

இந்தியா சுந்திரம் அடைந்த 75 வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஒட்டுமொத்த இந்திய மக்களும் தங்களும் வீடுகளில்  தேசிய கொடி ஏற்றும்படியும், தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் உள்ள புரோபைல் டிபியில் தேசிய கொடி வைக்க வேண்டும்  என  பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதையடுத்து, அமைச்சர, அரசியல் தலைவர்கள், சினிமா  நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் முதற்கொண்டு மக்கள் அனைவரும்  75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளனர்.

இந்த  நிலையில்,  சுதந்திர தினவிழா  நடைபெறும் செங்கோட்டை பகுதியில்  10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  ஏற்கனவே  சுதந்திர தினத்தைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள்  முயற்சிக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த  நிலையில், அங்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டில்லியிலுள்ள ஆனந்த் விஹார் என்ற பகுதியில் போலீஸார் சோதனை நடத்தினர். அதில், 2000 தோட்டாகள்,வெடிமருந்துகள் இருந்த பைகள் கண்டுப்பிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக 6 பேரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

75வது சுதந்திர தினம் இன்னும் 3 தினங்கள் நடக்கவுள்ள நிலையில்,  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாட்டில் சிறந்த முதல்வர்களில் ஸ்டாலின் 3 ஆம் இடம் !