ஐதராபாத்தில் சொத்துக்களை வாங்கி குவிக்கின்றாரா நடிகை நயன்தாரா?
நடிகை நயன்தாரா சென்னையில் ஏற்கனவே வீடுகள் உள்பட பல சொத்துக்களை வாங்கி குவித்த நிலையில் தற்போது ஹைதராபாத்தில் சொத்துக்களை வாங்கிக் குவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா என்பதும் அவர் ஒரு திரைப்படத்திற்கு சுமார் 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னையில் நடிகை நயன்தாராவுக்கு ஏற்கனவே வீடுகள் மற்றும் இடங்கள் இருக்கும் நிலையில் தற்போது ஹைதராபாத்தில் இரண்டு பங்களாக்களை அவர் வாங்கி உள்ளதாகவும் இந்த பங்குகளின் விலை 30 கோடி என்றும் கூறப்படுகிறது
சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை சொத்துக்களாக வாங்கி குவித்து வருகிறார் என்பதும் அதேபோல் வியாபாரத்திலும் முதலீடு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது